×

வெயிலில் சிரமமின்றி நடந்து செல்ல தஞ்சாவூர் பெரியகோயில் வளாகத்தில் தண்ணீர் தெளிக்கும் பணி தீவிரம்

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக்கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து கோயிலை கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் கோயில் வளாகம் மற்றும் கோயில் முன்புறம் உள்ள சாலை எந்நேரமும் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். பெரியகோயில் தொல்லியல் துறை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என மூன்று நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கோடைவெயில் துவங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் கோயில் வளாகத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு தரைவிரிப்புகளும் போடப்படும். இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி நடப்பதற்காக கோயில் வெளி பிரகாரங்களில் கோயில் ஊழியர்கள் பைப் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியானது நேற்று காலை ஒரு முறை, பகல் ஒரு முறை, மாலை ஒரு முறை என மூன்று முறை செய்யப்படுகிறது. அதேபோல் பக்தர்களின் வசதிக்கேற்ப விரிப்பும் விரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த விரிப்பிலும் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.


Tags : Thanjavur ,
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...