×

மாரியம்மன் கோயில் திருவிழா

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வட்டம், அகரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் பெண்கள் கூழ் எடுத்து ஊர்வலமாக சென்று, மாரியம்மனுக்கு படையலிட்டனர். நேற்று காலை மேளதாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக சென்று, தென்பெண்ணை ஆற்றங்கரையில், புனித நீரில் கங்கை சிறப்பு பூஜைகள் செய்து, பூங்கரகத்திற்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, ஊர்வலமாக எடுத்து சென்று வீதி உலா வந்தனர். பின்னர், கரகம் கோயிலை அடைந்தது.  மாலையில், பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து, கோயிலை சுற்றி வந்து கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். பிறகு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு தெருக்கூத்து நாடகம் நடந்தது.

Tags : Mariamman Temple Festival ,
× RELATED மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெறிச்சோடிய மீன் மார்க்கெட்