வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பொம்மிடி போலீசார், நூற்பாலைக்கு நேரில் சென்று வட மாநிலத்தவர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம். எந்த பிரச்னையாக இருந்தாலும், உடனடியாக எங்களுக்கு தகவல் கொடுங்கள். உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எங்கள் கடமை. எந்த நேரத்திலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.உடன் வேலை செய்பவர்களால் ஏதாவது பிரச்னை என்றாலும் உடனடியாக தகவல் தெரிவியுங்கள். உதவ தயாராக இருக்கிறோம் என்று உறுதி அளித்தனர்.

Related Stories: