×

சின்னமனூர் பகுதியில் பாகற்காய் சாகுபடி தீவிரம்

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் முல்லைப் பெரியாறு நீர் பாசனத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வருடம்தோறும் இருபோகமாக நெல் சாகுபடி, தென்னை, வாழை, திராட்சை, செங்கரும்பு, ஆலை கரும்பு மற்றும் காய்கறிகள், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, உளுந்து என பல தரப்பட்ட விவசாயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிகிறது. இந்நிலையில் தற்போது சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி பகுதிகளில் பாகற்காய் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக உயரமான பந்தல்கள் அமைத்து பாகற்காயினை வளர்த்து வருகிறார்கள். இந்தப் பாவக்காய்க்கு இயற்கை உரம் மருந்து தெளித்து சரியாக 70வது நாட்களில் அறுவடை துவங்கி விடும். வாரம் ஒருமுறை பறித்து, இரண்டு மாதம் வரையில் தொடர்ந்து பறிக்கலாம்.இந்தக் குறுகிய கால பாகற்காய் சாகுபடி விவசாயிகளுக்கு ஓரளவிற்கு கைகொடுப்பதால், தற்போது பல பகுதிகளில் இப்பாகற்காயை விவசாயிகள் சாகுபடி செய்து, சந்தைகளில் விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.

Tags : Chinnamanur ,
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி