×

தேனி மாவட்டத்தில் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

தேனி: தேனி மாவட்டத்தில் தாட்கோ மூலமாக எஸ்சி மற்றும் எஸ்டி இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது. தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, பணியாளர் அரசு தேர்வு ஆணையமான எஸ்எஸ்சி நடத்தும் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் சுமார் 11 ஆயிரம் காலிப்பணியிடங்கள் தேர்வாணையத்தால் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டு தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி வேரெண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட உள்ளது. இதில் 18 வயது முதல் 32 வயது வரை உள்ள 10,12 மற்றும் பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடக்கும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடக்க உள்ளது. இப்பதவிக்கான தேர்வு முறையானது கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட், பிசிக்கல் எபிசியன்சி டெஸ்ட், டாகுமெண்ட் வெரிபிகேசன் ஆகிய மூன்று முறைகளில் நடக்க உள்ளது. இப்போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிக்கேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்பட உள்ளனர். இத்தேர்வுகளில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com < http://www.tahdco.com > என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்பட உள்ளது.இத்தகவலை கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.

Tags : Theni district ,
× RELATED தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு...