முதலீடுகளுக்கு கூடுதல் வட்டி தரும் டெபாசிட் திட்டம் ரெப்கோ வங்கியில் அறிமுகம்

காரைக்குடி: இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியில் முதலீடுகளுக்கு கூடுதல் வட்டி தரும் சிறப்பு டெபாசிட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து காரைக்குடி கிளை உதவிப் பொது மேலாளர் ஆர்.பாஸ்கரன் கூறியதாவது, ‘‘ரெப்கோ வங்கியில் முதலீடுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு 15 மாதங்களுக்கு 8.55 சதவீதம், மற்றவர்களுக்கு 8.05 சதவீதம் வட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகைக் கடன்களுக்கு கிராமுக்கு ரூ.4 ஆயிரத்து 200 வரை மதிப்பீட்டாளர் கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது. மேலும், அடமானக் கடன்களுக்கு 5 கோடி வரையும் குறைந்த வட்டியில் விரைவாக கடன் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளைப் பெற்று பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: