×

போகலூர் எம்.பி, எம்எல்ஏ.,க்கள் பங்கேற்பு

பரமக்குடி: பரமக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட போகலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொட்டி தட்டி அய்யன் சேம்பர் ராமராஜ் மகன் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், போகலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் ஆகியோரின் குழந்தைகள் சுதர்சன், வர்ணிஹா ஆகியோரின் காதணி விழா நேற்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்து நடத்தி வைத்து வாழ்த்தினார். ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கே.வி.எம் ருக்மன் கார்ப்பரேட் சர்வீஸ், சிஇஓ .கேவி மூவேந்தரன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பூமிநாதன் வரவேற்றார், இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுப. தங்கவேலன் சுந்தர்ராஜன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி வடக்கு நகர செயலாளர் ஜீவரத்தினம், ஒன்றிய செயலாளர் கதிரவன், ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலை உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகளும், சார்பு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் நன்றி கூறினார். விழாவில் காண ஏற்பாடுகளை அய்யன் சேம்பர் பிரிக்ஸ் முத்துக்குமார் தலைமையிலான குடும்பத்தார்கள் செய்திருந்தனர்.

Tags : Pokalur ,MLA ,
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...