×

திண்டுக்கல் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் வனப்பகுதியில் உள்ள பறவைகள் குறித்து வனத்துறை சார்பில் கணக்கெடுக்கும் பணிகள் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த வருடம் திண்டுக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் வனக்கேட்டத்திற்கு உட்பட்ட சிறுமலை, ஒட்டன்சத்திரம், நத்தம், அய்யலூர், அழகர்கோவில், வத்தலக்குண்டு மற்றும் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இப்பணியில் வனத்துறையினர், கல்லூரி மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: திண்டுக்கல் வனக்கோட்டத்தில் ஏற்கனவே நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கப்பட்ட நிலையில் தற்போது நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்தது. அரிய வகை பறவை இனங்கள் பாதுகாக்கப்படுகின்றனவா, இனப்பெருக்கம் எந்த அளவில் உள்ளது, அதன் வாழ்விடங்கள், வெளிநாட்டு பறவைகள் வேறு ஏதேனும் புதிதாக வந்துள்ளதா போன்ற ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறுமலை பகுதியில் கெண்டலாந்தி, தகைவிலன், கென்னறி, பிளேகேட்சிங், மைனா, காட்டுக்கோழி, மயில், சிட்டுக்குருவி என 25க்கும் மேற்பட்ட பறவை வகைகள் உள்ளது. சிறப்பு கேமராக்கள், பைனாகுலர்கள், ஒலி அறியும் கருவிகள் மூலம் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இவ்வாறு கூறினர்.

Tags : Dindigul Forest Reserve ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ