பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன் கைது கிணற்றில் குதித்து இறந்த சம்பவம்

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவி கிணற்றில் குதித்து இறந்த சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. அவரது மனைவி தரணி. இவர்களுக்கு 2 மகன்கள். பிரபு பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது 16 வயது மூத்த மகள் வாணாபுரத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி மாணவி தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்ததை, அவரது பெரியப்பா மகன் பிரசாத்(26) என்பவர் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரசாத் மீது வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் பிரசாத் நேற்று சரணடைந்தார். அவரை இன்ஸ்பெக்டர் தனலட்சுமி கைது செய்து சிறையில் அடைத்தார்.

Related Stories: