×

மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

தூத்துக்குடி, மார்ச் 6: தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஜோதிபாசு நகரில் உள்ள கருமாரியம்மன் கோவில் மைதானத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவிற்கு சண்முகையா எம்எல்ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணக்குமார், பழனி மகாராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சி துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி, ஒன்றிய துணைச்செயலாளர் வசந்தகுமாரி, செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், மைக்கேல்ராஜ் முன்னிலை வகித்தனர். விழாவில் பங்கேற்ற மீன்வளம் மற்றும் கால் நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்க கூடிய முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம்.

எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு பணியாற்றி தமிழகம் முழுவதும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு தினமும் ஒவ்வொரு மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் கனிமொழி எம்பி, மக்கள் நலன் தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு சிந்தித்து மக்களுக்கான தொடர் பணிகளை ஆற்றி வருகிறார். இனி வர இருக்கின்ற காலம் முக்கியமானது. அதை எதிர்நோக்கி அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். பின்னர் அங்கன்வாடி மையங்களில் உள்ள 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்கள் மற்றும் 5 வகையான உணவுகளுடன் கூடிய அன்னதானத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

விழாவில் கூட்டுறவு வங்கி தலைவர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், கூட்டுறவு வங்கி தலைவர்  சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் சிவகுமார், தர்மலிங்கம், செல்வகுமார், தர்மராஜ், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர் சிவகுமார், அவைத்தலைவர் முருகன், பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினர்கள் பாரதிராஜா, பெலிக்ஸ், கிளைச்செயலாளர் காமராஜ், வக்கீல் கிருபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் தூத்துக்குடி, மார்ச் 6:தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், செல்வராஜ், கணேசன், சீனி, மாரிப்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி பேசினார். போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,

ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுஉறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள், சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பேசினர். மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags : Minister ,Anitha Radhakrishnan ,Thoothukudi ,M.K.Stal ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...