×

விளாத்திகுளம் அருகே கோவில் குமரெட்டையாபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி மக திருவிழா தேரோட்டம்

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே கோவில் குமரெட்டையாபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மக உற்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.  விளாத்திகுளம் அருகே கோவில் குமரெட்டையாபுரத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மக உற்சவ விழா கடந்த மாதம் 25ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் 6ம் நாளான 2ம்தேதி இரவு 12 மணிக்கு கழுவேற்றம் நடந்தது. 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் கோவில் குமரெட்டையாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி நிலையம் வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இன்று (6ம்தேதி) மாலை 4.30 மணிக்கு மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

Tags : Kumarettaiyyapuram Balasubramanya Swamy Temple ,Vlathikulam Masi ,Maha Festival ,
× RELATED விருத்தாசலத்தில் மாசிமக விழா...