சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் கணக்கெடுப்பு 40 வகையான நிலவாழ் பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளும், பல்வேறு வகையான பறவைகளும் வசிக்கின்றன. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர், விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய 10 வனச்சரகங்களில் கடந்த ஜனவரி 29ம் தேதி நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நிலத்தில் வாழும் தரைவாழ்  பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. 10 வனச்சரகங்களிலும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிநவீன தொலைநோக்கி கருவிகள் மற்றும் கேமராக்களை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: