×

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திரண்ட பக்தர்கள் மாசி மாத வளர்பிறை சனி பிரதோஷம்

வேலூர், மார்ச் 5: மாசிமாத வளர்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பிரதோஷ தினத்தில்தான் சிவன் பாற்கடல் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தை உண்டு உலக உயிர்களை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இப்பிரதோஷ காலங்களில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டால் அனைத்து பாவங்களும் களையப்பட்டு புண்ணியம் கிடைப்பதாக ஐதீகம். குறிப்பாக தேய்பிறை, வளர்பிறை பிரதோஷங்கள் விசேஷமாக கருதப்படுகிறது.

அதன்படி மாசி மாத வளர்பிறை பிரதோஷமான நேற்று மாலை வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அதேபோல் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இப்பூஜையில் வேலூர் நகரம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கிலான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனால் கோட்டை வளாகம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது.

Tags : Jalakandeswarar ,Varapirai ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...