×

கீழ்வேளூர் அடுத்த தேவூர் திரவுதியம்மன் கோயிலில் மாசி பெருவிழா

கீழ்வேளூர்: கீழ்வேளூர் அடுத்த தேவூர் திரவுபதியம்மன் கோயிலில் மாசி பெருவிழாவையொட்டி நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். நாகப்பட்டிம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் திரவுதியம்மன் கோயிலில் மாசி பொருவிழா கடந்த 20ம் தேதி பூச்சொரிதல் மற்றும் சக்தி கரகத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினம் தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு சந்தன அலங்காரம் நடைபெறும். இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மன் விதி உலா காட்சி நடைபெற்றது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னர் முத்தால் ராவுத்தர் பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags : Devur Dravuthiamman temple ,Kilvellur ,
× RELATED பாழடைந்த கட்டிடங்களுக்கு இடையே இயங்கும் கீழ்வேளூர் காவல் நிலையம்