×

பெண்ணேஸ்வர மடத்தில் கிரிவலம்

காவேரிப்பட்டணம், மார்ச் 5:  காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வர மடம் வேதநாயகி உடனமர் பென்னேஸ்வரர் திருக்கோயிலில், கிரிவலம் வருகிற நாளை (6ம்தேதி) நடக்கிறது. இம்மலையில் சித்தர்களால் பூஜிக்கப்பட்ட அஷ்ட லிங்கங்கள், ராமர், லட்சுமணன், தர்பணம் கொடுத்த இடம், பஞ்சபாண்டவர்கள் இப்பகுதிக்கு வருகை தந்தது என பல சிறப்புகள் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் 3ம் குலோத்துங்க சோழனால் கிபி 1188ம் நூற்றாண்டு ஏழு நிலைகளுடன் 110 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம், 3 அடுக்கு விமானம் உள்ள கருவறையில் சுயம்பு லிங்கமாக பெண்ணேஸ்வரர் அமைந்துள்ளது.

பவுர்ணமியை முன்னிட்டு நாளை மாலை, தென்ெபண்ணை நதியில் கங்கை அம்மன் வழிபாடு மற்றும் மகா ஆரத்தியுடன் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி துவங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள், ஊர் தலைவர்கள், சிவனடியார்கள், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Krivalam ,Panneeswara Mutt ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்