×

தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் விசாரனை

பாலக்கோடு, மார்ச் 5: மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15வது வார்டு பொதுக் கழிவறையில், கடந்த ஆண்டு தூய்மை பணியாளர்களான வெங்கடேசன், கோவிந்தராஜ் ஆகியோரை, பேரூராட்சி அதிகாரிகள் மனித கழிவை கையால் அள்ள வைத்தது தொடர்பாக, தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்திற்கு புகார் சென்றது. புகார் தொடர்பாக ஆணைய தலைவர் வெங்கடேசன், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  ‘நேரடி கள ஆய்வு மேற்கொண்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை தனித் தனியாக விசாரணை மேற்கொண்டதில், மனித கழிவுகளை மனிதன் அள்ள கூடாது என்கின்ற சட்ட விதிமுறைக்கு புறம்பாக, இரவுக் காவலர் சங்கரன் என்பவர் மனித கழிவுகளை துப்புரவு பணியாளர்களின் கைகளால் அள்ள வைத்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்படும்,’ என்றார். இந்த விசாரணையின் போது, சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமார், கூடுதல் எஸ்பி அண்ணாமலை, டிஎஸ்பி சிந்து, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குருராஜன், தாசில்தார் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : National Sanitation Commission ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா