×

திமுக கொடியேற்று விழா

தர்மபுரி, மார்ச் 5: பென்னாகரம் வடக்கு ஒன்றியத்தில், திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி, கட்சி கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார்.  நிகழ்ச்சியில், வடக்கு ஒன்றிய செயலாளர் சபரிநாதன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, நல்லம்பள்ளி துணை சேர்மன் பெரியண்ணன்,

மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெளதம், ஒன்றிய துணைச் செயலாளர் கல்பனா மாதேஷ், மாவட்ட பிரதிநிதி வேட்டராயன், பாரதி, ரத்தினவேல், பெரியசாமி, பிக்கிலி ஊராட்சி கிளை செயலாளர்கள் அண்ணாதுரை, ஜம்பேரி, மெய்வேல், கிருஷ்ணன், கன்னியப்பன், கோவிந்தசாமி, செல்வகுமார், செல்வம், ராஜேந்திரன், மாதேஷ், ஹரி விக்னேஷ், இளங்கவி, சூரியா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி