பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் அபராதம்: நகராட்சி ஆணையாளர் தகவல்

சாத்தூர், மார்ச் 5: சாத்தூர் நகராட்சி ஆணையாளர் இளவரசன்  விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘‘சாத்தூர் நகராட்சி பகுதியில் 24 வார்டு பகுதியில் உள்ள 16 சமுதாய கழிப்பறைகள், 5 பொது கழிப்பறைகள், புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. எனவே சாத்தூர் நகர் பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்து செல்லும் போதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதுகுறித்த விழிப்புணர்வு வாசகங்கள் சாத்தூர் மெயின்ரோடு, பேருந்து நிலையம், நகரின் முக்கிய இடங்களில் வரையப்பட்டுள்ளது. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தில் திறந்த வெளி கழிப்பிடமற்ற நகருக்கான தர சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளோம். எனவே அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதனை மீறி திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: