×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

போடி, மார்ச் 5: தேனி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். போடி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் வீதம் 2 மோதிரமும், பழவகைகளும் பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், 2 ஆண் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டி, தேனி வடக்கு மாவட்ட துணை செயலாளர் செந் தில்குமார், போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...