மதுரையில் நவீன சலவைக்கூடம்: மேயர் திறந்து வைத்தார்

மதுரை, மார்ச் 5: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் வைகை தென்கரை பகுதியில் உள்ள குருவிக்காரன் சாலை அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சலவைக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வைகை ஆற்றங்கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து தெற்கு மண்டலத்தில் வில்லாபுரம் பகுதியில் ரூ.13.73 லட்சம், அனுப்பானடி பகுதியில் ரூ.3.36 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜையில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ பூமிநாதன், மண்டலத் தலைவர்கள் முகேஷ் சர்மா, சரவண புவனேஸ்வரி, நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் வரலட்சுமி, திருமலை, சையது முஸ்தபா கமால், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர் சந்தனம். சுகாதார அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், கோபால், விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், கவுன்சிலர் செய்யது அபுதாகீர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: