×

திருவாதவூர் கோயிலில் திரவுபதி அம்மன் திருக்கல்யாணம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

மேலூர், மார்ச் 5: மேலூர் அருகே பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலூர் அருகே திருவதாவூரில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயிலில், ஆண்டு தோறும்பூக்குழி திருவிழா நிகழ்ச்சி தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா பிப்.23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

திரவுபதி, அர்ச்சுனன் திருக்கல்யாணத்தில், வேத பாராயணங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேலூரை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் உட்பட பிரசாதங்கள் கொடுக்கப்பட, மஞ்சள் கயிறை பெண்கள் அணிந்து கொண்டனர். விழாவின் கடைசி நிகழ்வான பூக்குழி திருவிழா, மார்ச் 10ல் நடைபெற உள்ளது.

Tags : Tirupati Amman ,Tiruvadavoor Temple ,
× RELATED பசும்பலூர் திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா