×

மாசிபட்ட எள் பயிருக்கு காப்பீடு செய்ய மார்ச் 15ம் தேதி கடைசி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் மாசிப்பட்ட எள் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மார்ச் 15ம் தேதிக்குள் காப்பீடு ெசய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நடப்பு ஆண்டு மாசி பட்டத்தில் எள் சாகுபடி சுமார் 1000 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இவ்வருடம் பிப்ரவரி மாதத்தில் பெய்த பருவம் தவறிய மழையினால் உளுந்து பயறு அழிந்து போனாலும் மாசி பட்டம் எள் சாகுபடிக்கு தேவையான ஈரப்பதம் மண்ணில் உள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் எள் சாகுபடி செய்துள்ளனர் பாமணி கொருக்கை தேசிங்குராஜபுரம் சேகல், தீவம்மாபுரம், கொத்தமங்கலம், ஆலத்தம்பாடி, பழையங்குடி ஆகிய கிராமங்களில் எள் சாகுபடி பெரும் அளவில் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி மற்றும் இடையூர் ஆகிய வருவாய் சரகங்கள் எள் பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டர் எள் சாகுபடி பரப்புக்கு ரூபாய் 34,210 க்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஹெக்டருக்கு விவசாயி தனது காப்பீட்டுக்கு பிரிமீயம் தொகையை ரூ.513.50 செலுத்த வேண்டும். வருவாய்த்துறை ஆவணங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சான்றின் அடிப்படையில் பொது சேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். எள் பயிரை காப்பீடு செய்து கொள்ள மார்ச் மாதம் 15ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே கடைசி நாள் வரை காத்திருக்காமல் எள் சாகுபடி செய்திருக்கும் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு