ஆலங்குடி அருகே தைலமர காட்டில் திடீர் தீ

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெண்ணவால்குடி தெற்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த செல்லையா ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தைலம் மரக்கட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி அனைத்தனர். இதே போன்று மாஞ்சன்விடுதி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான தைல மரத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற புதுக்கோட்டை நீர்தாங்கி வண்டி நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Related Stories: