×

மாத்தூர், நமுனசமுத்திரம் காவல்நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

புதுக்கோட்டை:  தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேற்று திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியை கலந்து கொண்டு மாத்தூர், புதுக்கோட்டை வழியாக ராமநாதபுரம் சென்றார். முன்னதாக மாத்தூர் வந்தபோது அங்கிருந்து காவல்நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை முறையாக வரவேற்கப்படுகிறார்களா? என்று கேட்டறிந்தார். ஆய்வின் போது காவல்நிலையத்தில் வருகை பதிவேடு மற்றும் வழக்கு பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ஆவணங்கள் சரியாக இருந்ததை தொடர்ந்து மாத்தூர் காவல்நிலைய ரைட்டர் செல்வராணிக்கு பாராட்டு தெரிவித்து ரொக்க பணம் அளித்து கவுரவித்தார். அப்போது கீரனூர் டிஎஸ்பி செங்குட்டுவேலன், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர். இதனை அடுத்து புதுக்கோட்டை வழியாக வந்த டிஜிபி சைலேந்திரபாபு புதுக்கோட்டை அடுத்த நமுனசமுத்திரம் காவல்நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே வரவேற்றார்.

அதனையடுத்து நமுனசமுத்திரம் காவல்நிலையத்தில் முறையாக ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார். மேலும் வழக்கு பதிவு ஆவணங்கள் முறையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். பராமரிப்பு சரியாக இருந்ததையடுத்து ரைட்டர் சங்கருக்கு ரொக்க பணம் அளித்து கவுரவித்தார். அப்போது எஸ்ஐ சத்தியாதேவி உள்ளிட்ட பலர் இருந்தனர். இதனை அடுத்து அங்கிருந்து புறப்பட்ட டிஜிபி சைலேந்திரபாபு ராமநாதபுரம் சென்றார். திடீரென டிஜிபி காவல் நிலைய ஆய்வு செய்ததால் புதுக்கோட்டை காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : DGP ,Shailendrababu ,Namunasamudram Police Station ,Mathur ,
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...