×

தேசிய அறிவியல் தின விழா

தேனி, மார்ச் 4: தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் ஜெயராமன் வரவேற்று பேசினார். பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி வாழ்த்தி பேசினார். விழாவை கல்லூரி முதல்வர் சீனிவாசராகவன் துவக்கி வைத்தார். அறிவியல் தினவிழாவில் ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகஷே் கலந்து கொண்டு மூடநம்பிக்கைகளை கைவிட்டு அறிவியல் பூர்வமாக எந்தவொரு செயலையும் கையாள வேண்டும் என பேசினார்.
இதில் மாணவர்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர்கள் சுகன்யா மற்றும் அர்ச்சனா ஆகியோர் செய்தனர்.

Tags : National Science Day Celebration ,
× RELATED ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்