மண்டபம் அருகே அரியமான் கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி

ராமநாதபுரம், மார்ச் 4: கல்லூரி மாணவ, மாணவியருக்கான தமிழ்நாடு முதல்வர் கோப்பை பீச் வாலிபால் போட்டியில் மதுரை, சிவகங்கை அணிகள் வென்றன. தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் தொடங்கியது. பல்வேறு குழு விளையாட்டுகள் போட்டிகள் நிறைவடைந்தன. இந்நிலையில், கடற்கரை விளையாட்டு போட்டிகள் மண்டபம் அருகே அரியமான் கடற்கரையில் நடந்தது. கல்லூரி அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான பீச் வாலிபால் போட்டியில் மதுரை,  திண்டுக்கல், தேனி,  விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட அணிகள் கலந்து கொண்டன. ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராம வன்னி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் பியூலா ஆகியோர் துவக்கி வைத்தனர். இளைஞர் நலன் மற்றும் ஆடவர் பிரிவில் சிவகங்கை வித்யகிரி கலை, அறிவியல் கல்லூரி, பரமக்குடி அரசு கலை கல்லூரி, விருதுநகர் கலசலிங்கம் பல்கலை., அணிகள் முதல்  மூன்றிடம் பிடித்தன. மகளிர் பிரிவில் மதுரை அமெரிக்கன் கலை கல்லூரி அணி முதல் மூன்று இடம் பிடித்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தினேஷ் ஏற்பாடு செய்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ்பாபு, ரமேஷ், கார்த்திக், அஜீஸ் கனி, நாகநாதன், தெய்வேந்திரன், அருணாசலம் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

Related Stories: