×

சிவகாசி மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம் சேதமடைந்த சாலைகளும் சீரமைப்பு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி பகுதியில் 48 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சியின் சாலைகள் பல்வேறு பகுதிகளில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சியின் அனைத்து பிரதான சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு ெசய்யப்பட்டது. இதையடுத்து கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு குழாய் பதிக்கும் பணிக்காக ேதாண்டப்பட்ட சாலை தவிர்த்து மற்ற இடங்களில் சாலை அமைக்கும் பணி ெதாடங்கப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சி 45 வது வார்டு சுப்பிரமணியபுரம் காலனி சாலை கடந்த பல ஆண்டுகளாக போடப்படாமல் இருந்தது. தற்போது இங்கு புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கம்மவார் திருமண மண்டபத்தில் இருந்து விருதுநகர் செல்லும் சாலை, தெய்வான நகர் சாலை சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிகளை மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஸ்பிரியா காளிராஜன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த மேம்பாட்டு பணிகள் குறித்து மேயர் சங்கீதா இன்பம் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள அனைத்து சாலைகளும் நூற்றாண்டு நிதியில் இருந்து சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைகள் மழையால் சேதமடையாமல் இருக்கும் வகையில் மிகவும் தரமானதாக போடப்படும். இது தவிர மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே உள்ள பிரதான சாலைகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றார்.


Tags : Sivakasi ,Municipal Corporation ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி