×

மயிலாடும்பாறையில் காட்டுப்பன்றி தாக்கி 3 பேர் படுகாயம்

வருசநாடு: வருசநாடு அருகே, மயிலாடும்பாறையில் காட்டுப்பன்றி தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். க.மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர்கள் பால்சாமி (52), பால்பாண்டி (50). இவர்கள் இருவரும் கிராமத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்றபோது, இருவரையும் காட்டுப்பன்றி தாக்கியுள்ளது. அதுபோல், அப்பகுதியைச் சேர்ந்த பரமன் மனைவி செல்வராணியையும் (36) தாக்கியுள்ளது. இதில், மூவரும் படுகாயம் அடைந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த 2 கறவை மாடுகளையும் தாக்கியுள்ளது. தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர், மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக மயிலாடும்பாறை காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘மயிலாடும்பாறை கிராமத்தில் கால்நடைகளான எருமைமாடு மற்றும் பசுமாடுகளையும் காட்டுப்பன்றி தாக்கி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.




Tags : Mayiladumbara ,
× RELATED கழிவுநீர் கலக்குது.. குப்பைகள்...