தேனியில் கிழக்கு சந்தை பகுதியில் பள்ளி நேரத்தில் சரக்கு வாகனங்களுக்கு தடை கலெக்டரிடம் மனு

தேனி: தேனியில் கிழக்கு சந்தை பகுதியில் பள்ளி நேரங்களில் சரக்கு வாகனங்கள் வந்து, செல்ல தடை விதிக்க  வேண்டும் என கலெக்டரிடம் இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் மனு அளித்தனர்.தேனி நகர இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி,நகர தலைவர் செல்வபாண்டியன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நேற்று தேனி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) அன்பழகனிட்ம கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: தேனி நகர், கிழக்கு சந்தை வழியாகதினமும் தனியார் பள்ளியைச் சேர்ந்த 7000 பள்ளிமாணவ மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர் பள்ளி வாகனங்களும் இங்கு வந்து செல்கின்றன.

காலையில் பள்ளிக்கு செல்லும் நேரம் காலை 8:30 முதல் 9.15 மணி வரையிலும், மாலையில் பள்ளி முடிந்து திரும்பும் நேரம் 3.00 மணி முதல் 4.30 ஆகிய நேரங்களில் சரக்கு லாரிகள், சரக்கு வேன்கள் அதிக அளவில் அங்கு நிறுத்தப்படுவதோடு, சரக்குகளுடன் வந்து செல்கின்றன. இதனால் டூவீலர்கள், ஆட்டோக்களில் அழைத்து வரப்படும் குழந்தைகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் நேரங்களில் கடந்த காலங்களில் இருந்தது போல் சரக்கு வாகனங்கள் வருவதற்கான தடையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: