தேவதானப்பட்டி அருகே உள்ள இயற்கை எழில்கொஞ்சும் மஞ்சளாறு அணைப்பகுதியை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சக தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

தேனி: தேனி அருகே மாணிக்காபுரத்தில் கிழக்குத் தெருவில் குடியிருப்பவர் சங்குநாதன். இதே தெருவில் குடியிருப்பவர் முத்து. இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சங்குநாதன், இதே கிராமத்தில் உள்ள கணேசன் என்பவரது வீட்டில் கொத்தனார் வேலை செய்துள்ளார். இதனையறிந்த முத்து, சங்குநாதன் வீட்டிற்கு வந்து, நான் வேலை பார்ப்பதாக இருந்த வீட்டில் நீ எப்படி வேலை செய்யலாம் என அசிங்கமாக பேசி தாக்கினார். இதுகுறித்து சங்குநாதன் புகாரில், வீரபாண்டி போலீசார் முத்து மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: