திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் அருகே உள்ள பாரதிபுரத்தில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா ஆலயம். இங்கு பாபாவிற்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருவது வழக்கம். தொடர்ந்து வாரந்தோறும் வியாழக்கிழமை பாபாவிற்கு உகந்த நாள் என்பதால் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாபாவிற்கு பக்தர்களின் திருக்கரங்களால் விபூதி அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை இட்லி பிரசாதமும், வாரந்தோறும் வியாழக்கிழமை மதியம் அன்னதானமும் நடைபெற்றது. மேலும் மாலை சிறப்பு பூஜையும், பஜனையும் தொடங்கி சப்பாத்தி பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.