×

குடிநீர் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் ரீடெய்லர்ஸ் அசோசியேசன் சார்பில் ஆண்டு பொது குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைவர் செல்வரத்தினம் தலைமை தாங்கினார். அசோசியேசன் நிறுவனத் தலைவர் பிரபாகரன், செயலாளர் தம்பித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், ஜெயபால், நவீஸ் ராஜன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். இதில் தமிழகம், கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடிநீர் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்த கோரியும், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் கொடைக்கானல் ஏரி சாலை, அண்ணா சாலை வழியாக கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. ஆண்டு பொது குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடிநீர் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு 18% ஜிஎஸ்டி வரியை நிர்ணயித்து உள்ளது. இந்த ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டி வரியை குறைக்க தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திலும் விழிப்புணர்வு பேரணியிலும் நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags : Union Government ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...