தீமிதி விழாசேலம்:சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள காளியம்மன் கோயிலில் தீமிதி விழா நேற்று நடந்தது. சேலம் செவ்வாய்பேட்டை அடுத்த சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் பொங்கல் வைத்தல் வைபவம் நடந்தது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை, தீமிதி விழா நடந்தது. விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் ஏராளமானோர், அக்னி குண்டத்தில் தீமித்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதனை முன்னிட்டு கோயில் உள்ள வலம்புரி விநாயகர், காளியம்மன், வீர ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.