×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு

ராசிபுரம்:  தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று (3ம்தேதி) நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு, கார் மூலமாக, நாமக்கல்லுக்கு வந்தார். முன்னதாக அவர், ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு ராசி மஹாலில் நடந்த வெண்ணந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் துரைசாமி இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மணமக்கள் கௌரிசங்கர், யுவக்கு திருமண வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது ஒன்றிய செயலாளர் துரை ராமசாமி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

Tags : Minister ,Udayanidhi Stalin ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...