வேனில் கடத்திய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி பறக்கும்படை தனி தாசில்தார் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள், குருபரப்பள்ளியில் இருந்து கொத்த கிருஷ்ணப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள புளியஞ்சேரி கிராமத்தில், நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்திய அதிகாரிகள், சோதனை செய்தனர். அப்போது வேனில் பூண்டு மூட்டைகளுக்கு அடியில் 21 பைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் பங்காருபே்டை தொப்பனப்பள்ளியை சேர்ந்த ஜெகதீஷ்(27) என்பது தெரியவந்தது. கரூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க, பூண்டு மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் டிரைவர் ஜெகதீசை, கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து ஜெகதீசை கைது செய்த போலீசார், வேனை பறிமுதல்

செய்தனர்.

Related Stories: