×

பொதுமக்களிடம் மோசடி எதிரொலி ஒரத்தநாடு தனியார் நகைக்கடைக்கு சீல்

ஒரத்தநாடு: பொதுமக்களிடம் மோசடி எதிரொலியாக ஒரத்தநாடு தனியார் நகைக்கடைக்கு சீல் வைத்து குற்றப்புலனாய்வுத்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் அசோகன் தனியார் தங்கமாளிகை உள்ளது. இந்த நிறுவனம் பொதுமக்களிடம் சுமார் ரூ.1 கோடிக்கு மேலாக வாரம், மாதந்திர சீட்டு மற்றும் நகை அடகு கடை நடத்தி பொதுமக்களை ஏமாற்றியதாக கூறி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு சாலை மறியல் ஈடுபட்டனர்.மேலும், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் புகார் கொடுத்திருந்தனர். பொதுமக்களின் புகார்கள் அனைத்தும் தஞ்சாவூர் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த தஞ்சாவூர் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், ஒரத்தநாட்டில் செயல்பட்டு வந்த அசோகன் தங்க மாளிகைக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர்.இதையடுத்து, குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் அகிலா, ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான வருவாய் ஆய்வாளர் சந்திரா, விஏஓ சக்திவேல்,கிராம உதவியாளர் காமராஜர் ஆகியோர் அசோகன் தங்கமாளிகைக்கு நேரில் சென்று சீல் வைத்தனர்.கொள்முதல் நிலையத்தில் விற்க குவித்துள்ளனர்ராமநாதபுரம், 8.கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் அறுவடைப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் அறுவடை நெல்லை டிராக்டரில் ஏற்றி வந்து கொள்முதல் நிலையங்கள் முன்பாக விவசாயிகள் காயவைத்து தூற்றும் பணிகளில் இறங்கி உள்ளனர்.

Tags : Orathanadu ,
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...