×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

புதுக்கோட்டை, மார்ச்3: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளில் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் பிறந்த 23 குழந்தைகளுக்கு திமுக வடக்கு மாவட்ட கழக சார்பில் தங்கம் மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, நகர கழக செயலாளர் செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stal ,
× RELATED செல்பி எடுத்தாலும் கட்டணுமா? ஜிஎஸ்டி...