சாலை விபத்தில் திருச்சியை சேர்ந்தவர் பலி

ஜெயங்கொண்டம்: திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சிங்காரம் மகன் சுரேஷ் (40).இவரது மனைவி சுமித்ரா (34).இவர்களது உறவினர் லதாவை அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். லதாவை பார்க்க சுரேஷ், அவரது மனைவி சுமித்ராவும் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். உடையார்பாளையம் அருகே துளாரங்குறிச்சி மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் சென்ற போது, ஸ்கூட்டர் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த தம்பதியினரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். படுகாயமடைந்த சுரேஷ் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் எஸ்எஸ்ஐ சுமதி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: