வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் மாசி மகத்திருவிழா 73 நாயன்மார்களுடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் சுவாமி சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றதுநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகப் பெருவிழா கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 17ம் நாள் மாசிமக திருவிழாவில் சந்திரசேகர சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்பு மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகர சுவாமி மற்றும் அம்பாளுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

அத்துடன் 73 நாயன்மார்கள் (63 நாயன்மார்கள் 10 தொகையடியார்கள்) எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: