வரக்கூடிய வேளாண்மை உழவர் நலத்துறை தனிபட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இடம்பெறும்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்ஆணைக்கிணங்க (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் அரியலுார்) 6 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024ம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கு இணங்க வேளாண்மைத்துறைக்கு என்று தனிநிதிநிலை அறிக்கை தொடர்பாக கேட்பு கூட்டம் நடத்த விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு உத்தரவிட்டார். அந்த வகையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் இல்லை. தமிழ்நாட்டில் முதன்முதலாக நம்முடைய முதலமைச்சர் தனிபட்ஜெட் கொண்டு வந்தார். தமிழக முதலமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்றபின்னர் இதுவரை இரண்டு முறை வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தற்போது மூன்றாவது முறையாக தாக்கல் செய்ய உள்ளோம். விவசாயிகளின் வளர்ச்சிக்காக தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்பொழுது சில மாதங்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் அரியலுார், புதுக்கோட்டை, திருச்சராப்பள்ளி, மதுரை) ஆகிய மாவட்டங்களில் மழையினால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு ரூ.112.71 கோடி நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,33,907 விவசாயிகள் பயன் பெறுவார்கள். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு கடந்த 2021- 2022ம் ஆண்டு ரூ.34,220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டு ரூ.33,007 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை டெல்டா மாவட்டங்களில் மட்டும் 2009 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதர மாவட்டங்களில் 672 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,701 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.கருத்து கேட்பு கூட்டத்தின் முக்கிய நோக்கமே விவசாயிகளை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்பதாகும். விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் அறிவிப்பாக மாறும் நிலை உள்ளது. எனவே விவசாயிகள் புதிய பயனுள்ள திட்டங்களை வெளிப்படையாக தெரிவிக்கலாம். விவசாயிகள் தங்கள் மாவட்டத்திற்கு ஏற்றாற் போல்திட்டங்களை குறிப்பாக தெரிவிக்கலாம். உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் வரக்கூடிய வேளாண்மை உழவர்நலத்துறை தனிபட்ஜெட்டில் புதிய திட்டங்களில் இடம்பெறும் இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமயமூர்த்தி, முதன்மைச் செயலாளர், ஆணையர் விஜயராஜ்குமார், (சர்க்கரைத்துறை), வேளாண்மை உழவர்நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர், நடராஜன், கலெக்டர் மகாபாரதி. எம்.பி ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், துரைசந்திரசேகரன், பூண்டி கலைவாணன், வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன், விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச்சான்றுத்துறை இணை இயக்குநர் ஜெயசெல்வின்இன்பராஜ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இணை இயக்குநர் ராமபிரசாத், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், அரசு வழக்கறிஞர் இராம.ேசயோன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: