தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் நெய்தலூர் காவல்காரன்பட்டி சாலையில் இருந்து ஆலத்தூர் அரிசனகாலனி சுடுகாடு வரை புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த பகுதி மக்களின் கோரிக்கையை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆலத்தூர் ஊராட்சியில் நெய்தலூர் காவல்காரன்பட்டி சாலையில் இருந்து ஆலத்தூர் அரிசனகாலனி சுடுகாடு வரை புதிய தார்சாலை அமைக்க 350 மீட்டர் தூரத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. இதனை அடுத்து ஆலத்தூரில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால் தலைமையில் நடந்தது. தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு புதிய பணிகளை தொடங்கி வைத்தார்.