×

கரூருக்கு இன்று வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்

கரூர்: கரூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க கரூருக்கு இன்று வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கரூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க ஒன்றிய செயலாளர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார். கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி ஏற்பாட்டின்கீழ் நாளை (4ம் தேதி) கரூரில் நடைபெறும் அரசு விழா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் துவக்க விழா மற்றும் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்ற திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மோகனூர் வழியாக கரூர் வட்டம் வாங்கல் வழியாக கரூர் வருகிறார். இதனை முன்னிட்டு கரூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 200 மகளிர் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை செய்கின்றனர். மேலும் கழக நிர்வாகிகள் கட்சி கொடியுடன் உதயசூரின் சின்னத்தை கையில் ஏந்தியவாறு வரவேற்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

புகழிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம் வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியில் உள்ள புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு திருப்பணிக்குழு தலைவரும், புகழூர் நகராட்சி தலைவருமான சேகர் (எ) குணசேகரன் தலைமை வகித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஊர் கொத்துக்காரர்கள் மற்றும் புகழூர் வட்டார ஆன்மீக நண்பர்கள், திருப்பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வரும் 27ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கும் கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை காண வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ள சிறப்பான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர்.


Tags : Minister ,Udayanidhi Stalin ,Karur ,
× RELATED கோவையில் தனியாருடன் இணைந்து சர்வதேச...