×

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற என்சிசி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா

திருச்சி, மார்ச் 2: குடியரசு தினவிழா அணிவகுப்பு மற்றும் பல்வேறு பயிற்சி முகாம்களில் பங்கேற்ற என்சிசி மாணவ மாணவிகளுக்கு நேற்று திருச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது.
டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் திருச்சி மண்டல என்சிசி சார்பாக கலந்து கொண்ட தேசியமாணவர் படை மாணவ, மாணவிகளுக்கும், அகில இந்திய அளவில் பல்வேறு பயிற்சி முகாம்களில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கும், கடந்தாண்டு தேதிய மாணவர் படையில் இருந்து பல சாதனைகள் படைத்த ‘இதர
மாணவ மாணவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய என்சிசி படை அதிகாரிகள், மற்றும் அலுவலர்களுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட 11 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 9 என்சிசி யூனிட்டுகளில் இருந்து பாராக்ளைடிங், மலையேற்றம், கடற்படை பயிற்சி உள்ளிட்ட 11 வகையான பயிற்சிகளுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பயிற்சிகள் முடிந்து திரும்பிய மாணவ, மாணவிகள் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் தங்களுடைய பயிற்சிக்குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் திருச்சியை சேர்ந்த இரண்டாவது பட்டாலியன் ஒட்டுமொத்த சேம்பியன் கோப்பையை வென்றுள்ளது. அதேபோல் கும்பகோணம் 8-வது பட்டாலியன் இரண்டாம் இடத்தை தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.

விழாவில் திருச்சி மண்டல் என்சிசி கமாண்டர், கர்னல் சுனில் பட் விழாவிற்கு தலைமையேற்று சாதனையாளர்களுக்கு விருது, பாராட்டு சான்றிதழ், கேடயம், நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். அதன்பின்னர் மாணவர்களிடம் பேசுகையில் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க என்சிசியின் குறிக்கோளான சமூக ஒற்றுமை,
ஒழுக்கத்தை எப்போதும் பின்பற்ற வேண்டும். ஒரு சிறந்த குடிமகனாக மாணவ, மாணவிகள் வாழ வேண்டுமென்றால் உங்களுடைய முழு உழைப்பையும், கவனத்தையும் நூறு சதவீதம் கொடுக்க வேண்டும்.

அது தான் உங்களின் தலைமை பண்புகள், தனிதிறன்கள் வளர்த்துகொள்ளும் ஆயுதம். இதுபோன்ற பயிற்சிகள் மூலம் நீங்கள் பெறும் அனுபவங்கள் தான் உங்களை காப்பாற்றும் என்றார்.
விழாவில் கர்னல் ரஜினிஜ், கர்னல் கோஸ்ஸாமி, கர்னல் சஞ்சீவகுராணா,கர்னல் சந்தீப் மேனன், கர்னல் சந்திர சேகர், விங் கமாண்டர் அபிசேக், லெப்டினன்ட் கர்னல் அருண்குமார் மற்றும் லெப்டினன்ட் கர்னல் அஜய்குமார் உள்பட பல்வேறு பட்டாலியன்களை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக லெப்டினன்ட் கர்னல் வெற்றிவேல் நன்றி கூறினார்.

Tags : NCC ,Republic Day ,
× RELATED போதை விழிப்புணர்வு குறித்து என்சிசி மாணவர்கள் பேரணி