×

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

திருவாரூர், மார்ச் 2: திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 20 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. தமிழகத்தில் அனைத் து மாவட்டங்களிலும் மாதத்தில் முதல் புதன்கிழமை மற்றும் 3வது புதன்கிழமைகளில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் மனுதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதனையொட்டி திருவாரூர் எஸ்.பி அலுவலகத்திலும் எஸ்.பி சுரேஷ்குமார் தலைமையில் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு வரும் நிலையில், நேற்று 11வது வாரமாக எஸ்பி அலுவலகத்தில் இந்த சிறப்பு குறைதீர் கூட்டமானது நடைபெற்றது. இதில் ஏற்கனவே எஸ்.பி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு மூலம் அளிக்கப்பட்ட மனுக்கள் போன்றவை சம்பந்தப்பட்ட ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காண்பதற்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அவ்வாறு அனுப்பப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என ஒவ்வொரு மனுதாரர்களையும் செல்போன் மூலம் நேரில் அழைத்து எஸ்பி அலுவலகத்தில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 7 மனுதாரர்களும் நேற்று நேரில் வரவழைக்கப்பட்டு எஸ்.பி சுரேஷ்குமார் முன்னிலையில் டிஎஸ்பிக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மூலம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதுடன் புதிதாக 20 மனுக்களும் பெறப்பட்டன. அதில் கொரடாச்சேரி மற்றும் குடவாசல் போலீஸ் ஸ்டேசன்களில் நீண்டகாலமாக வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்த 2 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : SP ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...