×

ராஜபாளையம் நகராட்சி கூட்டம்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கல்பனா, நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை கூட்டத்தில் விவாதித்தனர். இதில் நகராட்சி நுண் உர கிடங்கு மாற்றி அமைப்பது பற்றியும், சத்திரப்பட்டி சாலையிலிருந்து பச்சமடம் வரை 60 அடி ஸ்கீம் ரோடு குறித்து சந்தேகம் எழுப்பியும், அதிகரித்துள்ள நாய் தொல்லைகள் குறித்தும், சுகாதார பணிகள் கொசுத்தொல்லை அதிகரித்தது பற்றியும் கேள்வி எழுப்பினர்.

மேலும் தாமிரபரணி குடிநீர் குழாய் சப்ளைக்கு மீட்டர் பொருத்துவது குறித்து சந்தேகத்தையும், விடுபட்ட குடியிருப்புகளுக்கு மீண்டும் வழங்குவது குறித்தும், புதிய ரோடு பணிகளின் போது வாறுகால் உயரத்தை அதிகரிப்பது பற்றியும், அந்தந்த வார்டு பகுதி குப்பைகளை அதே பகுதியில் பிரித்து அகற்றுவது குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டது. பின்னர் நகர சபை தலைவர் அதிகாரிகளின் விளக்கம் கேட்டு பொதுமக்களின் பிரச்னையை சரி செய்ய உத்தரவிட்டார்.


Tags : Rajapalayam Municipal Assembly ,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...