வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

தேனி: தேனி மாவட்ட சிறுபல சரக்கு வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணைதலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆரோக்கிய பிச்சை முன்னிலை வகித்தார். துணை செயலாளர் ராஜபாண்டி வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின்போது, கவர்ச்சியான விளம்பரங்களில் நம் உறுப்பினர்கள் ஏமாற்றம் அடையாமல் அரசு உடமையாக்கப்பட்ட நம்பிக்கையான நிறுவனங்களில் தங்கள் சேமிப்புகளை முதலீடு செய்து பாதுகாப்பு பெற வேண்டும், உறுப்பினர்கள் அனைவரும் உடல் நலம் பேண தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ,சங்க உறுப்பினர்கள் தரமான பொருட்களையே வாங்கி விற்பனை செய்ய வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் சங்க ஆலோசகர் நவநீதன் நன்றி கூறினார்.

Related Stories: