கலை இலக்கிய மன்ற விழா

சிவகங்கை: சிவகங்கை சாம்பவிகா மேல் நிலைப்பள்ளியில் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளிச் செயலர் சேகர் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கலை இலக்கிய போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கலைமணி அம்பலம், தமிழ்நாடு மின்வாரிய உதவி பொறியாளர் அசோக்குமார், மருத்துவர் கார்த்திக் ராஜன், பொதுப்பணித் துறை முதல் நிலை ஒப்பந்ததாரர் இளங்கோ மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.

Related Stories: