திருப்புத்தூரில் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் தமிழ்நாடு மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சண்முகவடிவேல், பேருந்து நிலையம் அருகில் திமுக கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், மோர் மற்றும் பழங்கள் வழங்கினார். இதில் காரையூர் ஊராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி மதியழகன், துணைத்தலைவர் அருணகிரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜிம்கண்ணன், நேரு, பசீர் அகமது, நகர் பொருளாளர் பிச்சை முகமது, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் காரையூர் மணி, ஆலம்பபட்டி பாண்டியன், ஆத்தங்கரைப்பட்டி சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் பார்த்தசாரதி, ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், நகர் அவைத்தலைவர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மாங்குடி மற்றும் காரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் திமுகவினர், தமிழக முதல்வரின் பிறந்தநாளைக் கொண்டாடினர். விழாவிற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மலைராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தகப்பிரிவு துணை அமைப்பாளர் முத்துவேல் பாண்டியன், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை (பொறுப்பு) சந்திரா அனைவரையும் வரவேற்றார். பிறந்தநாள் விழா கேக் வெட்டி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. காரையூர் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்செல்வி மதியழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருணகிரி, விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், வைகை இளமாறன், திருப்பதி, ராஜேஷ், உள்ளிட்ட கலந்து கொண்டனர். ஆசிரியை செல்வி, தமிழ் கல்வியின் தரம் மற்றும் வாழ்வியல் முன்னேற்றம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். ஆசிரியை அன்சர்பானு நன்றி கூறினார்.

Related Stories: