×

கொடைக்கானலில் கோடை சீசனுக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா ரோஜா செடிகளில் கவாத்து பணி துவங்கியது

ெகாடைக்கானல்: கொடைக்கானலில் கோடை சீசனுக்கு தயாராகும் விதமாக பிரையண்ட் பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகள் துவங்கியது.
கொடைக்கானல் ஏரி பகுதியில் உள்ளது பிரையண்ட் பூங்கா. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் பல லட்சம் வண்ண மலர்கள் உள்ளன. இந்நிலையில் கொடைக்கானலில் மே மாதம் கோடை சீசனில் நடைபெறவுள்ள 60வது மலர் கண்காட்சியையொட்டி இந்த பிரையண்ட் பூங்காவில் 750 வகைகளுக்கும் அதிகமான ரோஜா பூக்கள் பூத்து குலுங்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையொட்டி முதற்கட்டமாக ரோஜா செடிகளில் கவாத்து பணிகள் நேற்று துவங்கின.

ரோஜா செடிகளில் அதிகமாக வளர்ந்துள்ள கிளைகளை வெட்டி அகற்றுவதுதான் இந்த கவாத்து பணி. ரோஜா செடிகளில் அதிகளவில் பூக்கள் பூக்க வைப்பதற்காக இந்த கவாத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ரோஜா செடிகளில் இந்த கவாத்து பணி அடுத்த சில நாட்கள் நடைபெறும். இப்பணி முடிவடைந்ததும் ரோஜா செடி பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்த தகவலை பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.



Tags : Kodaikanal ,Bryant Park ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்