×

மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தரமாக வழங்கப்படுகிறதா?.. அரணாரை அரசு பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு

பெரம்பலூர்,மார்ச் 2: பெரம்பலுார் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் மாணவர்களு க்கு வழங்கப்படும் உண வின் தரம் குறித்து பெரம் பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். பெரம்பலுார் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை ஊரா ட்சி ஒன்றிய நடுநிலைப்ப ள்ளியில் தமிழக முதலமை ச்சரின் காலை உணவுத்திட் டத்தின் மூலம் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உண வின் தரம்குறித்தும் பள்ளி வகுப்பறைக் கட்டிடங்கள், கழிவறைகள், சமையல் கூ டம் ஆகியப் பகுதிகளை பெ ரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று (1ம்தேதி) நேரில் பார்வையிட்டு ஆய் வுசெய்து மாணவ மாணவி களுடன் அமர்ந்து உணவ ருந்தினார்.

பின்னர்மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்ததாவது:
மாணவர்கள் எக்காரணத்தி ற்காகவும் பள்ளி செல்லாமல் இருந்துவிடக்கூடாது, கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதற்காகவும், அனைத்து மாணவர்களுக் கும் கல்வி சீராக, சமமாக, தரமாக கிடைக்க வேண் டும் என்பதற்காகவும் மா ணவர்களுக்கென பல்வே று சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் கள். அதன் ஒரு பகுதியாக நகரப் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் ஒன்றாம் வகு ப்பு முதல் 5-ஆம் வகுப்பு வ ரை பள்ளிக்குச் செல்லக்கூ டிய குழந்தைகளுக்கு முத லமைச்சரின் காலை உண வுத்திட்டம் சிறப்பாகசெயல் படுத்தப்பட்டு வருகின்றது.

கிராமப்பகுதிகளிலும், நக ரப்பகுதிகளிலும் பள்ளி செல்லும் மாணவர்கள் கா லையிலேயே புறப்பட்டு வி டுவதாலும், சிலருடைய குடும்ப சூழல் காரணமாக வும் பெரும்பாலான குழந் தைகள் காலை உணவு சா ப்பிடுவதில்லை என்பதால் பள்ளி மாணவர்களுக்கு சத்து குறைபாடு ஏற்படுவ தை தவிர்க்கும் வகையில், காலை உணவு வழங்கும் திட்டம் பெரிதும் பயனுள்ள தாக இருக்கின்றது. மாண வ மாணவிகளிடத்திலும், பெற்றோர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான காலை உணவுதிட்டமானது, முத்து நகர், பெரம்பலூர் கிழக்கு, பெரம்பலூர் மேற்கு மற்றும் அரணாரை ஆகிய 4 இடங் களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத் தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தின் மூலம் 90 மாண வர்கள் 74 மாணவிகள் என மொத்தம் 164 பள்ளிக் குழந் தைகள் பயன்பெற்றுவருகி ன்றனர் எனத்தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர்(பொ) ராதா, பெரம்பலூர் மாவட்ட தொடக்க க்கல்வி அலுவலர் அண் ணாதுரை, நகராட்சி கவுன் சிலர் துரை காமராஜ், பெரம்பலுார் தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,Aranarai Government School ,
× RELATED டெல்லி பயணம் ரத்து: புதிய தமிழ்நாடு...